Wednesday, February 14, 2007

உடுமலைப்பேட்டையில் அகல பாதை வேண்டி கடையடைப்பு

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகல ரயில் பாதை வேண்டி உடுமலையில் உள்ள பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்தப்படியுள்ளனர். ஆனால் கடந்த வருடம் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையால் இத்திட்டம் கடந்த வருட ரயில்வே வரவு செலவு திட்ட அறிக்கையில்(பட்ஜேட்) சேர்க்கப்பட்டு வெறும் 1 கோடி ஒதுக்கப்பட்டது (தேவை 240 கோடி). ஆனாலும் அத்திட்டம் துவங்கப்படாததால் தாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த இப்பகுதி மக்கள் இவ்வருடம் தங்கள் போராட்டதை தீவரப்படுத்தியுள்ளனர்

முதல் முறையாக அனைத்துக்கட்சியினரும் ஒன்று சேர்ந்து டாக்டர் சிவசண்முகம் தலைமையில் கடந்த வாரம் ஆர்பாட்டம் செய்தனர். நேற்று கடையடைப்பு நடத்தினர். உடுமலையில் உள்ள அனைத்து மக்களும் நகருக்கு பொதுவான பிரச்சனை என்பதால் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து இதில் பங்கு பெற்றனர்.
காதலர் தினத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் காதல் ஜோடிகள் பெரும் துன்பபட்டனர் (??????).

பத்திரிக்கையில் வந்த படங்கள் இங்கே....



நன்றி தினகரன் மற்றும் தினமலர்