Wednesday, November 4, 2009

slice of life @ udumalpet - 4

* சில நாட்களுக்கு முன் பள்ளபாளையம் அருகில் உள்ள மானுப்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் இலவச டிவியை மக்களுக்கு வழங்கினார். அதற்கு பதிலாக அவர் இலவச முகமுடிகளை வழங்கியிருக்கலாம். மக்களுக்கு பாதுகாப்பாகாவது இருக்கும். ஆமாங்க அங்க வைச்சு இங்க வைச்சு கடைசியில அடிமடியிலேயே கைவைச்சுட்டான்னு ஒரு பழமொழி மாதிரி அமெரிக்கவுல வந்து இந்தியாவுக்கு வந்து சென்னைக்கு வந்து கோவைக்கு வந்து கடைசியில நம்ம உடுமலைப்பேட்டைக்கும் வந்துவிட்டது பன்றிக் காய்ச்சல். தாராபுரம் ரோட்டில் உள்ள ஆர்.கே.ஆர் பள்ளி மாணவர்கள் 5 பேர்க்கு முதலில் வந்தது. சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் இதை எழுதிக் கொண்டுயிருக்கும் வரையில் 15 பேர்க்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதி 20 பேரின் டெஸ்ட் ரிசல்ட் வந்தால் தெரியும். தொலைபேசிய நண்பர்களிடம் கெத்தாக நம்ம ஊருக்கேல்லாம் வராது என்று சொல்லிய நான் இப்போது வடிவேலு ஸ்டைலில் "சிங்கத்தை சாச்சுப்புட்டாங்களே" னு கவலையோடு இதை டைப் செய்து கொண்டுயிருக்கிறேன்.

* வாட்டி எடுத்த வறட்சி கொஞ்சம் நீங்கியிருக்கிறது. ஓரளவு சுமாரான மழை பெய்திருக்கிறது நம்ம ஊரில். ஆனால் அமராவதியில் தண்ணீர் இல்லாததால் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

* பஞ்சலிங்க அருவியில் நல்லா தண்ணீர் கொட்டுகிறது. இப்போது பாதுகாப்புக்கு கம்பிகள் உடை மாற்ற அறை என்று பல வசதிகள் செய்திருக்கிறார்கள் என்று பேப்பரில் படித்தேன். அடுத்த தடவ ஊருக்கு வரும்போது ஒரு தடவ அங்கேயும் ஒரு விசிட் அடிங்க...

* நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறது நம்ம ஏரியா வனத்துறை. கிட்ட தட்ட ஏழு டன் வெட்டப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்த சந்தன மரங்களை காட்டுக்குள் கைப்பற்றி இருக்கிறது வனத்துறை. அநேகமான இப்போது காட்டுக்குள் வெறும் சந்தன மரத்தின் வேர்கள் மட்டும் தான் பாக்கியிருக்கும் என்று தோன்றுகிறது அந்த அளவுக்கு கடத்தல்காரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

விளம்பரம்: இது வரை தமிழ்ப் புத்தகங்களை மட்டும் உடுமலை.காமில் விற்று வந்த நான் சமீபத்தில் குறுந்தகடுகளையும் அதில் சேர்ந்து உள்ளேன். எப்போதும் போல் ஆதரவு தாருங்கள். இந்த நேரத்தில் நம்ம ஊர் வலைப்பதிவர்கள் நாகா(இந்த வார தமிழ்மண நட்சத்திரம்) செந்தில் வேலன் துக்ளக் மகேஷ் ஆகியோர்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆதவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நீங்க எந்த ஊர் என்று கேட்கும் காட்சியிருக்கிறதாம். அதற்கு அவர் என் ஊர் உடுமலைப்பேட்டை என்று பதில் சொல்கிறாராம். பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்த படத்தை இந்த ஒரு காட்சிக்காகவே பார்க்க செல்லும் நேரத்தில் இந்த சிறு பதிவு

நன்றி

4 comments:

நாகா said...

//ஆதவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் நீங்க எந்த ஊர் என்று கேட்கும் காட்சியிருக்கிறதாம். அதற்கு அவர் என் ஊர் உடுமலைப்பேட்டை என்று பதில் சொல்கிறாராம். பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்த படத்தை இந்த ஒரு காட்சிக்காகவே பார்க்க செல்லும் நேரத்தில் இந்த சிறு பதிவு//

படத்தப் பாத்துட்டு ஆபீஸ் முழுக்க எல்லார்கிட்டயும் டமாரம் அடிச்சேன் நம்ம ஊரப்பத்தி

Appu said...

சிதம்பரம் உங்கள பதிவுகா waiting for long time
படம் மொக்கை... நல்ல வேலை full படம் பார்த்தேன் ,இல்லை என்றால் ,இதை மிஸ் பண்ணீருப்பேன்.ஊருக்காக ஒரு மொக்கை படம்...

அபிமன்யு said...

ஊர் பேருக்காக மட்டும் பாத்த ரெண்டாவது மொக்கை படம் இது ! முதல் படம் 'வாஞ்சி நாதன் ' ! டயலாக் - 'உன்னை உள்ள தூக்கி போட்டா உத்தர பிரதேஷுல இருந்து இல்ல உடுமலைபேட்டைல இருந்து கூட ஆள் வராது ' - அனுஷம் தியேட்டர்ல என்னையும் சேர்த்து 13பேர் !

சிதம்பரம் said...

@ அசோக்...

அப்ப நம்ம ஊரு பேர் வந்தாலே படம் மொக்கைதானு சொல்லுங்க...