Thursday, November 19, 2009

செய்திகள் சில

* மற்ற இடங்களில் எப்படியோ நம்ம ஊரில் கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் சரியான அளவு மழை பெய்திருக்கிறது

* மழைக்கு முன் 70 அடி அமராவதி அணையில் 28 அடி தண்ணீர் இருந்தது. 6 நாளில் அணை நிரம்பி இப்போது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருக்கிறது

* இனி ஒரு 6 மாத காலத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது

* ஆனால் திருமூர்த்தி அணையில் கதையே வேறு. இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைவு. அதனால் மற்ற பகுதி மற்றும் அழியாறு அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக வந்தால்தான் அணைக்கு தண்ணீர். காண்டூர் கால்வாயில் ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் (என்னது நம்ம ஊரிலும் நிலச்சரிவா??) பாறை விழுந்து கால்வாய் ஒரு பக்கம் வாயைப்பிளந்தது. அதனால் திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து குறைவு (குறைவு என்ன வரத்தே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்). கால்வாய் சரி செய்ததும் அணை நிரம்ப வாய்ப்பிருக்கிறது.

* மற்றபடி மழையினால் பாதிப்பு என்று சொல்லும்படி ஏதும் நடக்கவில்லை.

* நம்ம ஏரியா விவசாயிகள் உப்பு விக்கப்போனால் மழை பெய்கிறது. மாவு விற்கப் போனால் காத்து அடிக்கிறது என்று புலம்பிக் கொண்டுயிருக்கிறார்கள்.
இதுதான் விசயம். போனதடவை ஊரே மக்காசோளம் நட்டார்கள். நட்டப்பட்டார்கள் (விளைச்சல் அதிகம் விலை குறைவு). உடனே எல்லோரும் ஒன்று கூடி மக்காசோளத்தை விட்டுவிட்டு தக்காளிக்கு மாறினார்கள். மாறவில்லை நஷ்டம் (அதே விளைச்சல் அதிகம் விலை குறைவு). இந்த வருடம் மக்காசோளம் விலை அதிகம். ஆனால் யாரும் நடவில்லை. தக்காளிக்கு காப்பு முடிந்தது. விலையும் அதிகரித்துள்ளது. இனி அனைவரும் ஒன்று கூடி பேசி எதை விதைத்து நஷ்டப்படலாம் என்று முடிவு செய்வார்கள். நம்மாளுகளின் ஒற்றுமை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த தடவை ஒரு பயிரின் விலை குறைந்தால் அதை எல்லாரும் அடுத்த தடவை தொட மாட்டார்கள். இன்னொரு குறை எல்லோரும் சொல்லிவைச்ச மாதிரி ஓரே பயிரைத் தான் நடவு செய்கிறார்கள். அதுவும் ஒரே நேரத்தில். சில அறிவு ஜீவிகள் எதிர்மறையாக செயல்பட்டு ஜாக்பாட் அடிக்கவும் செய்யத்தான் செய்கிறார்கள்.

*கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே "வர வர இந்த தொழில்அதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா"ன்னு அந்த மாதிரி நம்ம ஊர் வர வர இந்த கார் வைச்சிருக்கவங்க தொல்லை தாங்க முடியல. அனைவருக்கும் கார் தேவை தான.் வைத்துக்கொள்ளலாம். அதற்காக நம்மாளுக பண்ணும் சேட்டை தாங்க முடியல. குண்டூசி என்றாலும் சரி பேனா பென்சில் வாங்க வேண்டுமென்றாலும் காரை எடுத்துக்கொண்டு தளி ரோட்டுக்கு வந்து விடுகிறார்கள். மாலை நேரத்தில் ரோட்டின் கிழக்கு பக்கம் முழுவதும் காராக்தான் இருக்கும்.கார் எடுத்து வருபவர்கள் பெரும்பாலும் நகரத்தில் வசிப்பவாகள் தான். நேற்று எங்கள் கடைக்கு வந்தவர் கார் நிறுத்த வசதியில்லை என்று குறைபட்டு கொண்டார். இதற்கும் அவர் வீடு சார்பதிவாளர் அலுவகத்திற்கு அருகில் இருக்கிறது. (கிட்டதட்ட அவர் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் கொஞ்சம் தூரத்தில் எங்கள் கடை தெரியும்)

*பல்லடம் - உடுமலை சாலை விரிவாக்கப்பணிகள் 33 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டுயிருக்கிறது.(கமிஷன் போக மிச்ச பணத்திலையாவது ஒழுங்கா ரோடு போடுங்க சாமி!!!)

* திண்டுக்கல் - கோவை சாலை 4 வழிப்பாதையாகிறது. மடத்துக்குளத்தில் சாலையேட்டி இருக்கும் கட்டிடங்களுக்கு 2010ல் காலிசெய்யச்சொல்லி நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். ஆனால் உடுமலை நகரத்தில் ராகல்பாவிக்கு அருகில் இருந்து பைபாஸ் சாலை ஆர்கேஆர் பள்ளி அருகில் சென்று பின்பு பழனி ரோட்டில் ஏதே ஒரு இடத்தில் சேருகிறது. நகரத்தில் பழனி பொள்ளாச்சி சாலையோரம் இருக்கும் கடைகாரர்கள் தப்பித்துவிட்டார்கள்.

* பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி நிகர்நிலை பல்கலைகழகமாக மாறப்போகிறது. (பொறியியல் கல்லூரி தவிர்த்து). பெயர் "பொள்ளாச்சி பல்கலைகழகம்" (உடுமலைப்பேட்டை செய்தினு பேர் வெச்சுட்டு உனக்கு எதுக்கு பக்கத்து ஊர் செய்தியெல்லாம்???)

13 comments:

நாகா said...

//பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி நிகர்நிலை பல்கலைகழகமாக மாறப்போகிறது. (பொறியியல் கல்லூரி தவிர்த்து). பெயர் "பொள்ளாச்சி பல்கலைகழகம்" (உடுமலைப்பேட்டை செய்தினு பேர் வெச்சுட்டு உனக்கு எதுக்கு பக்கத்து ஊர் செய்தியெல்லாம்???//

சொல்லவே இல்ல????????

Mahesh said...

ஆஹா... நம்ம லோக்கல் ரிப்பொர்ட்டர் கலக்கறாரு...

காண்டூர் கால்வாய் சீக்கிரம் சரி செய்யப்பட அந்த பஞ்சலிங்கனையும், அமணலிங்கனையும் வேண்டுகிறேன்.

நட்டக்கணக்கு அதிகம்தான் போல... ம்ம்ம்ம்..

சிதம்பரம் said...

மன்னிக்கனும் மகேஷ். வந்த வெள்ளத்தில் 3 லிங்கங்கள் அடித்து செல்லப்பட்டன. வேண்டுமானால் 2 லிங்கனை வேண்டிக்கொள்ளுங்கள்...

ஜெயச்சந்திரன் said...

சிதம்பரம்.... லிங்கம் வெள்ளத்தில் செல்வது வழக்கம் தானே.. எத்தனையோ முறை இவ்வாறு நடந்து விட்டது....

இன்னொன்றா... கல்லூரிகளின் எண்ணிக்கையை விட பல்கலைகழகங்களின் எண்ணிக்கை கூடி வருகிறது

அபிமன்யு said...

இதெல்லாம் சரி... ஆனா நம்ம ஊரு ரெம்ப வருசமா காப்பாத்திட்டு வந்த பேர இப்போ கடந்த சில வருசமா தொலைச்சுடுச்சு போல ...
அதான்பா .. இருக்குற பள்ளிகள் எதுவுமே உருப்படியா இல்லன்னு கேள்விபட்டேன்!

2000துல நான் பள்ளி படிப்ப முடிச்சுட்டு காலேஜ் போனப்ப நெறைய பசங்க அந்த ஊரா,அந்த ஸ்கூலானு கேட்டப்ப ரெம்ப பெருமையா இருந்தது ..

இப்போ என் juniorsaa கேக்கும்போது பள்ளியும் தரம் இல்லை , வாத்தியார்களும் தரம் இல்லன்னு சொல்லும்போது மனசு வலிக்குது..

கல்விக்கும் climatukum தான் நம்ம ஊருக்கே பேரு! எத்தனை அருமையான வாத்தியார்கள் , நிறுவனங்கள் இருந்தது ஒரு காலத்தில் ! இப்போ அந்த வாத்தியார்கள் எல்லாம் எங்க போனாங்கனே தெரியல.. அதுவும் உடுமலைக்கே trademarkaa இருந்த ரெண்டு தனியார் பள்ளிகளும் படு மட்டமா விமர்சிக்கப்படறாங்க!

இது ரெம்ப முக்கியமான விசயமா இருக்கறதுனால , இத பத்தி மேல் அதிக தகவல்கள் கிடைச்சா நம்மால முடிஞ்சத எதாவது செய்யலாம் ..
குறைந்தபட்சம் நம்ம அதிருப்தியாவது தெரியபடுத்தலாம் ! இதுக்கு நல்ல பலன் கெடைக்கும்னு எனக்கு தோணுது.. ஏன்னா வலைபதிவுகள் வெளிபடுத்தர தகவல்கள் சக பதிவர்களால , வலை மேய்பவர்களால ஆராயப்பட்டு , விமர்சிக்கப்பட்ட பிறகுதான் உண்மைன்னு ஏத்துக்கபடுது!
அப்போ அது சம்மந்தபட்டவங்களுக்கு நிச்சியம் போகும் ! எதாவது நல்லது நடக்கலாம் !

சிதம்பரம் , உங்க பங்கு இல்லாம தகவல் சேகரிக்க முடியாது !
மாற்று கருத்துக்கள் ...?

அபிமன்யு said...
This comment has been removed by the author.
ஜெயச்சந்திரன் said...

அசோக் நானும் 2000 ல் பள்ளியை முடித்தவன் தான். ஆனாலும் பள்ளிகளை எதிபார்த்த காலம் எப்பொழுதோ மாறிவிட்டது. கட்டாயம் tuition செல்லும் கலாச்சாரம் எப்பொழுதோ வந்து விட்டது... பள்ளிகளை நம்பி யாரும் பரீட்சை எழுதுவது இல்லை... ஆங்கிலம் மற்றும் தமிழை தவிர அனைத்துக்கும் tuition தான் உதவுகிறது.... அதுவும் படித்தவர்கள் எல்லாம் IT companies நோக்கி செல்லும் போது (நானும் உள்ளடக்கம்) ஆசிரியர்களும் சரிவர சொல்லி தருவது இல்லை... என்னிடம் படிக்க வந்தால் தான் உனக்கு முழு மதிப்பெண் என்று சொல்லும் ஆசரியர்கள் வேறு... அதனால் பள்ளிகளை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை....

அபிமன்யு said...

உண்மைதான் ஜெயச்சந்திரன் ! ஆனால் நான் முன்வைத்திருப்ப‌து வேறு விசயம் ! பள்ளியை நம்புவது எப்போதோ ஒழிந்து விட்டது !நாமும் tuitionஐ நம்பித்தான் படித்தோம்! என் கேள்வி , உங்கள் கூற்றுப்படி வெளியே சென்று படித்தாலும் கடந்த 6,7 வருடங்களில் நம்மூர் மாணவர்களினால் பெரிய மதிப்பெண்கள் பெறுவது வெகுவாக குறைந்து விட்டதற்கு என்ன காரணம்?

Anandh said...

Hi anna.. Your posts are very superp.. Whenever i visit this site i feel like i am in udumalai.. Very thanks..

chidambaram said...

அதே என்னமோ உண்மை தான். சமீப காலமாக நம்ம ஊர் மாணவர்கள் பொதுத் தேர்வில் ரேங்க் எடுப்பது குறைந்து வருகிறது. மாநில அளவில் எடுப்பது போய் இப்போது மாவட்ட அளவில் எடுப்பது கூட குறைந்து வருகிறது...அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு செய்கிறேன் விபரமாக...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Please write more

Anonymous said...

please write more