Saturday, March 6, 2010

சின்னச் சின்ன செய்திகள்

எழுதி ரொம்ப நாளாச்சு. இரண்டு மூன்று வெளிநாட்டு பயணம்....அப்பறம் டெல்லி conference 24 நாள் மணி நேரமும் ஓயாத வேலை.

அப்படியெல்லாம் ஏதும் இல்லை. உள்ளுரிலேயே தான் குப்பை கொட்டிக் கொண்டுயிருந்தேன். பொதுவாக காலையில்தான் ப்ளாக் எழுதுவேன். கடந்த இரண்டு மாதமாக காலை 6 மணிக்கே மின்சாரம் போய்விடுவதால் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. (நீ எழுதலைனு யார் அழுதா??)

உடுமலை - பல்லடம் சாலை அகலப்படுத்தும் வேலை மும்முரமாக ஜம்மென்று நடைபெற்று வருகிறது. வேலைகள் எல்லாம் முடிந்து விட்டால் நல்ல கார் இருந்தால் 40 நிமிடத்தில் பல்லடம் சென்றுவிடலாம். அங்கிருந்து திருப்பூர் செல்லவும் 40 நிமிடம் ஆகும். அது வேற விசயம். (contract எடுத்தது அழகிரியின் ஆள் என்று கேள்விப்பட்டேன்

அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் கேரளா அணை கட்ட முடிவு பண்ணி ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இது நம்ம ஏரியாவிற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள் விவசாயிகள். திருப்பூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் மதுரை - நெல்லை ஏரியாவாசிகள் முல்லைப் பெரியார் அணையின் உயரத்தை கேரளா குறைத்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தவர்களே என்றும் பிற்காலத்தில் நம்மூர்காரர்களும் தினமும் 20 30 பஸ்களில் திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் நிலைவரும் என்று கூறுகிறார்கள். வழக்கம் போல அனைத்து கட்சிகளும் (திமுக காங்கிரஸ் தவிர) தனித்தனியாக போராட்டம் நடத்தினார்கள். அப்பறம் மறந்து விட்டார்கள். பார்ப்போம் என்னதான் நடக்கிறது. (நம்ம அரசியல்வாதிகள் சாலைகள் போட்டு பாலம் கட்டி சம்பாதித்தால் கேரளா அரசியல்வாதிகள் அணை கட்டியே சம்பாதிப்பார்கள் போல)

போக்குவரத்து சிக்னல்கள் பாதி நேரம் நிறுத்தியே வைக்கிறார்கள் காவல்துறையினர். காரணம் டிராபிக் இல்லாத நேரத்தில் நிறுத்தி வைப்பதாகவும் டிராபிக் அதிகமாக இருந்தால் மட்டும் சிக்னல் ஆன் செய்வதாகவும் கூறினார்கள். தினமலரில் பொருளாதாராம் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்பி விட்டதாக படித்தேன். ஒரு வேளை அதனால் மக்கள் எல்லாம் வேலை, பணம் தேடி வெளியிடங்களுக்கு சென்று விட்டார்களோ? (ரூம் போட்டு யோசித்த மாதிரி இருக்குதுங்களா?)




ஒரு வழியாக நமது ஊர் மின்மயானம் இன்று (14-3-2009) திறக்கப்பட்டு விட்டது. இதை கட்ட கிட்டதட்ட மூன்று வருட காலம் ஆகிவிட்டது. எல்லாம் பணம் தான் பிரச்சனை. இதை எழுதும் போதுதான் ஒரு பெரியவர் சொன்ன விசயம் நினைவுக்கு வந்தது. திருப்பூர் சுற்றுவட்டாரம் முழுவதும் விவசாயம் நடைபெற்றுக் கொண்டுயிருக்கும் போதே நம்ம ஊர் நூல் உற்பத்தியில் கொடி கட்டிப் பறந்தது. நம்ம ஊர் மில் முதலாளிகள் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்காமல் தங்கள் தொழிலையும் சரியாக கவனிக்காமல் இருந்ததால் ஒரு சுடுகாடு கட்ட கூட மூன்று வருடம் போராட வேண்டியிருக்கிறது. திருப்பூரை எடுத்துக் கொண்டால் அங்கே மின் மயானம் கட்டுகிறார்கள். பொது மக்களே பணம் போட்டு பாலம் கட்டுகிறார்கள். சாலைகள் போட்டுக்கொள்கிறார்கள். குறுகிய காலத்தில் மாநகராட்சி மாவட்டம் என்று வளர்ச்சி அடைத்ததுக்கு ஓரே காரணம் தொழில் வளர்ச்சி. இதற்கும் நம்ம ஊரில் மில்கள் எல்லாம் ஆரம்பித்து ரொம்ப நாட்களுக்கு பிறகு தான் அங்கே பனியன் தொழிலே ஆரம்பித்தது. ஆனால் அதை நம்ம ஊர் ஆட்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் நம்ம ஊர் படித்த இளைஞர் ஊர் ஊராக வேலைக்காகவும் தொழிலுக்காகவும் போகும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போ இதை பேசி பிரயோஜனம் இல்லை என்றாலும் இப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் நழுவ விட்டுவிட்டோம் என்று நினைக்கையில் வேதனை தான் ஏற்படுகிறது.


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மாரியம்ம்ன தேர் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறுகிறது. நம்ம ஊரில் உள்ள பிகர்களை எல்லாம் ஓரே இடத்தில் பார்க்க விரும்புபவர்கள் தேர்த்திருவிழா சமயத்தில் குட்டை திடலில் பார்த்து கண்டுகளித்து அம்மனின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்

முன்னரே சொன்னதுபோல நம்ம ஊரில் வரவர யாரும் வீட்டில சமைப்பது இல்லை என்றே தோன்றுகிறது. ரயில் நிலையம் அருகில் உள்ள சுகுணா அலுவலகத்துக்கு அருகில் அன்னவாசல் மற்றும் பழனி ரோட்டில காந்திராம்ஸ் நிறுவனத்தின் ஒரு அசைவ ஓட்டல் மற்றும் ஐந்தாறு சின்ன சின்ன உணவகங்கள் கடந்த இரண்டு மாதங்களில் திறக்கப்பட்டுள்ளது. பழனி ரோட்டில் நகைகடை போன்ற தோற்றம் உடைய ஏவிஎம் பேக்கிரி ஒன்று திறந்து உள்ளார்கள்.

ஏதேச்சையாக டிசம்பர் 31 இரவு நண்பருடன் பழனி செல்லவேண்டியிருந்தது.(கோயிலுக்கல்ல.அவரின் வியாபார விசயமாக...). திரும்பும் போது இரவு பத்தரை ஆகிவிட்டது. பார்த்தால் முக்கிய வீதியெங்கும் போலீஸ் மட்டும் தான் இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. எப்போதும் இருக்கும் ஜனநடமாட்டம் கூட இல்லை. (கொஞ்சம் அதிகமான பனி தான் காரணம். இந்த வருடம் கொஞ்சம் பனி அதிகம் தான். இப்போது ஓரளவு குறைந்து விட்டது).ஒரு வேளை போலிஸ் எல்லாம் முக்கிய வீதிகளில் புத்தாண்டு கொண்டாடுகிறார்களோ என்று எண்ணிக் கொண்டேன்

லதாங்கி திரையரங்க நிர்வாகம் கணீயூரில் ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்கள்.
சீனிவாசா வீதியில் உள்ள பழைய சரஸ்வதி லாட்ஜ் சுமார் 2 கோடி ரூபாய்க்கு கைமாறியுள்ளது.
ஐஸ்வர்யா நகரில் ஒரு சென்ட் 5 லட்சம் ரூபாய் வரை விலை போயுள்ளது. நம்ம ஊரில் பழைய படி ரியல் எஸ்டேட் விலைகள் ஏறத் தொடங்கியுள்ளது. ஆனால் தோட்டம் வயல் போன்றவற்றிற்கு டிமாண்ட் கொஞ்சம் குறைவு.

வெயில் இப்பவே வாட்டுகிறது. நம்ம ஊரை ஏழைகளில் ஊட்டி என்று ஒரு பேப்பரில் படித்தேன். அப்ப ஊட்டியிலும் 34 டிகிரி வெய்யில் அடிக்கும்ங்களா?

இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஊரில் ஆட்டோக்கள் அளவுக்கு மாருதி swift கார்கள் இருக்கும்போல...அந்த அளவுக்கு swift வந்துவிட்டது.

இன்னும் இருக்கிறது. சில தினங்களில் தருகிறேன்


12 comments:

Mahesh said...

//அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் கேரளா அணை கட்ட முடிவு பண்ணி ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது//

அய்யய்யோ.....

Mahesh said...

//ஏவிஎம் போக்கிரி //

போக்கிரி?? :)))))))))

Mahesh said...

//வெயில் இப்பவே வாட்டுகிறது. நம்ம ஊரை ஏழைகளில் ஊட்டி என்று ஒரு பேப்பரில் படித்தேன். அப்ப ஊட்டியிலும் 34 டிகிரி வெய்யில் அடிக்கும்ங்களா?//

அங்கல்லாம் 40ண்ணே :(

Mahesh said...

//நம்ம ஊரில் உள்ள பிகர்களை //

????????????????????????????????

Vidhya K S said...

(நீ எழுதலைனு யார் அழுதா??)

Did you check the number of visitors?

Unknown said...

good work chidambaram....

சிதம்பரம் said...

@ mahesh
வணக்கம். என்ன இப்படி கேட்டுட்டீங்கள..நம்ம ஊர்லையும் பிகர்கள் எல்லாம் இருக்குதுங்க...

ரோகிணிசிவா said...

நமக்கு பொள்ளாச்சிங்க ,அம்பத்து ஒன்னு புடிச்சு உடுமலை அத்தை வீட்டுக்கு வந்து நாயம் அடிச்ச மாதிரி இருந்துச்சு,உங்க blog படிச்சப்ப !

கட்டு சேவல் said...

உண்மையில் உங்களுடைய பதிவுகள் குறிப்பிட்ட இடைவெளியில் வந்தால் நல்லா இருக்கும்
காலம் தாழ்த்தி வந்தாலும் அருமையான தொகுப்பு ............கடைசியில் உடுமலை உணவுக்கு தலை நகராகும் போல் தெரிகிறது...உணவகங்களின் வளர்ச்சி ...அது உண்மையும் கூட ...
நன்றி

நாகா said...

Hmm.. ennennavo nadakkuthu oorula...

Vijay said...

anna arumai arumai...
(நம்ம அரசியல்வாதிகள் சாலைகள் போட்டு பாலம் கட்டி சம்பாதித்தால் கேரளா அரசியல்வாதிகள் அணை கட்டியே சம்பாதிப்பார்கள் போல)...
padikka padikka swarasiyam....

Sivasamy said...

//மாரியம்ம்ன தேர் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறுகிறது. நம்ம ஊரில் உள்ள பிகர்களை எல்லாம் ஓரே இடத்தில் பார்க்க விரும்புபவர்கள் தேர்த்திருவிழா சமயத்தில் குட்டை திடலில் பார்த்து கண்டுகளித்து அம்மனின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்//

வியாழக்கிழமை லீவு போட்டாச்சு....

நம்ம ஊர் தேர் பாத்து 3 வருஷம் ஆச்சு...

Obviously… figures கூட...

Let's see... :)