Thursday, July 16, 2009

கொஞ்சம் காத குடுங்க...


இப்ப நான் சொல்ல போற விசயம் கொஞ்சம் ரகசியமானது. படிக்கற உங்களுக்கு எனக்கும் தவிர யாருக்கும் தெரியாது. அதனால கொஞ்சம் ரகசியமா வைச்சுக்கோங்க...


1) கொங்கு மண்டலத்தின் செல்வாக்கான அரசியல்வாதி ஒருவர் சமீபத்தில் தனது scorpioவை விட்டு 19 லட்சம் மதிப்புள்ள வேறொரு காருக்கு மாறிவிட்டார். நண்பர் ஒருவர் தனிமையில் அதைப்பற்றி கேட்டபோது "ஆமாங்க சும்மா 50, 100னு பிக்பாக்கெட் அடிக்கரவன் எல்லாம் scorpioல வரான்.


நாமலும் அது வந்தா வித்தியாசம் வேண்டாமா என்று சொல்லியிருக்கிறார். (அதாவது 100ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பவனுக்கும் கோடி கோடியாய் அடிப்பவனுக்கு வித்தியாசம் வேண்டுமே அதனால் தான் காரை மாற்றிவிட்டார் போல)

2) அவர் உடுமலைப்பேட்டையின் தெற்குபகுதியின் மலையடிவார கிராமத்தின் பெரும் பண்ணைகாரர். சும்மா உட்காந்து சாப்புடாலே ஏழு தலைமுறைக்கும் வரும். அவ்வளவு சொத்துக்கு சொந்தகாரர். கேட்கவாவேணும் லொள்ளுக்கும் குசும்புக்கும்.... . தலைவருக்கு வீட்டில் வளர்க்கும் கோழி ஆடு போன்றவற்றை சாப்பிடவே பிடிக்காது. பின்ன? வனப்பகுதியில் அலைந்து திரியும் மிருகம் ஒன்று தான் அவருக்கு பிடித்த உணவு. அதுவும் அங்கேயே பிடித்து, சமைத்து சாப்பிடுவது தான் பிடிக்கும். என்னுடைய நண்பர் அவருக்கும் நண்பர். ரொம்ப நாளாய் அவரை கூப்பிட்டே இருந்தார். வாங்க பழகலாம் ஸாரி சாப்பிடலாம்னு. ஆமாம் அந்த மிருகத்தை பிடித்தால் 15 பேர் வரை சாப்பிடலாம். அதனால் இந்த மாதிரி நண்பர்களை கூட்டிட்டு தான் போவார் துரை. என்னுடைய நண்பர் ஒரு நாள் காலை அவருடன் வனப்பகுதிக்கு சென்றார். வனப்பகுதியை பாதுகாக்கும் தலைமை அதிகாரி வேறு ரொம்ப கண்டிப்பானவர் என்று அவர் கேள்விப்பட்டுள்ளார். மிருகங்களை வேட்டையாடி சால்மான்கானே தப்பிக்க முடியவில்லை. நாமெல்லாம் எங்கே என்று பயந்தபடியே சென்றார்.

நல்ல உயரமான பாறையில் பயங்கர சிரிப்புடன் பத்து பேர் கொண்ட கும்பல் ஏற்கனவே அங்கே கும்மாளம் அடித்து கொண்டிருந்தது. நண்பர் பயந்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். ஒரு அரைமணி நேரம் கழிந்த பின் யாரோ சிலர் பாறையில் ஏறி வருவது போல சத்தம் கேட்டது. எல்லாரும் சத்தம் வரும் திசையில் பார்த்தனர். இவருக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது. அங்கே நான்கு காவலர்கள் அதில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து கொண்டுயிருந்தார்கள். நண்பர் நல்லா மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தார். மூன்று காவலர்கள் இருபதடி தூரத்திலேயே நின்று கொண்டார்கள். தூப்பாக்கியுடன் இருந்த காவலர் மட்டும் அருகில் பண்னைக்காரரை நோக்கி வந்தார். நமது நண்பருக்கு வேர்த்து விறுவிறுத்து போனது. காவலர் பண்னைக்காரர் அருகில் வந்து குனிந்து " இன்னைக்கி வீட்டில விருந்தாளிங்க வந்திருக்கிறாங்க அதனால அய்யா கறியை கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டு வரச் சொன்னார்" என்று அந்த காவலர் கிசுகிசு குரலில் சொல்ல நம்ம நண்பருக்கு அப்போது தான் உயிர் வந்தது. (நல்லா பாக்குறாங்கைய்யா வேலைய....)

3) மாநிலத்தில் மற்ற பகுதியில் எப்படியோ...நம்ம ஊரைப் பொறுத்தவரையில் இரண்டு கழகத்தின் பெரும்புள்ளிகள் ஆற்றின் கரையில் இருப்பதை அள்ளுவதில் கரைதேர்ந்தவர்கள்(ஒற்றுமையாக). இது கடந்த இருபது வருடமாக தொடர்கிறது. அதாவது ஆட்சியில் இருப்பவர்கள் அள்ள, எதிர்கட்சியில் இருப்பவர்கள் கையில் காசு. அதனால் யாரும் வாய் திறக்கமாட்டார்கள். கொஞ்ச நாள் முன்னாடி முரசடித்து கொண்டிருக்கும் நடிகர் கூட்டதின் உள்ளுர் தலைவர் இரண்டு கழகத்தின் தலைவர்களை தொடர்பு கொண்டு என்னையும் 'நமக்கு நாமே' திட்டத்தில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு ஒரு முக்கிய புள்ளி போனிலேயே "சின்னப்புள்ள தனமா இருக்கு. முளைச்சு மூனுஇல விடல அதுக்குள்ள பங்கு கேட்குதா உனக்கு. போய் வேலைப்பாரு" என்று திட்டிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

படிச்சுட்டு உங்கள் கருத்தையும் சொன்னால் நல்லாயிருக்குங்க....

7 comments:

கோவி.கண்ணன் said...

ஐயோ......அரசியலா......மீ த எஸ்கேப்பு !
:)

digitallysankar said...

interesting......hmmmm ....

digitallysankar said...
This comment has been removed by the author.
Joe said...

//
காவலர் பண்னைக்காரர் அருகில் வந்து குனிந்து " இன்னைக்கி வீட்டில விருந்தாளிங்க வந்திருக்கிறாங்க அதனால அய்யா கறியை கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டு வரச் சொன்னார்" என்று அந்த காவலர் கிசுகிசு குரலில் சொல்ல நம்ம நண்பருக்கு அப்போது தான் உயிர் வந்தது. (நல்லா பாக்குறாங்கைய்யா வேலைய....)
//

ஹாஹாஹா! இந்தியாவில வேற எப்படி பாப்பாங்க, நம்ம அரசாங்க அதிகாரிகள்?

SUBBU said...

சின்னப்புள்ள தனமா இருக்கு.

Vijay said...

anna yaar antha perum pulli?

சிதம்பரம் said...

@vijay
என்னை சிக்கல்ல மாட்டிவிட்றாதே விஜய்