Thursday, July 30, 2009

நடந்ததும் நடக்கப்போவதும்

ஊரே அகலமானதாக தோன்றுகிறது. ஆமாம் நம்ம ஊரில் அனைத்து சாலைகளில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு பளிச் என்று காணப்படுகிறது நம்ம உடுமலைப்பேட்டை. பேருந்து நிலையத்தின் முன் உள்ள பழக்கடைகள், கல்பனா வீதியில் உள்ள கடைகள் உள்ள ஊரில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் காலி...(அதெல்லாம் சரி இன்னும் நாள் இப்படி இருக்கும்?. மறுபடியும் வரத்தானே போகுது...)

ரூம் போட்டு உட்காந்து யோசிச்சு பார்த்தாலும் தெரியல....ஏதுக்கு தாஜ் தியேட்டர்க்கு வடக்கே சிக்னல் வைச்சிருக்காங்கனு!

250 கோடி ஏமாற்றிய உடுமலை வாலிபர்கள் கைது - தினமலரில் செவ்வாய்கிழமையன்று வந்த செய்தி. இதைப் பற்றி விபரங்கள் வந்தவுடன் தனியாக ஒரு பதிவு போடுகிறேன். (உடுமலைப்பேட்டைல இருந்தா பெரிசா சொத்து சேக்கமுடியாதுனு யாருப்பா சொன்னது.... நன்றாக திட்டமிட்டு உழைத்தால் கண்டிப்பாக முடியும். இவர்களைப் போல...


நன்றி: தினகரன்

சில சுவாரசியங்கள்
* இவர்கள் மோசடி பண்ணிய பணத்தில் சுமார் 60 உயர்ரக குதிரைகள் வாங்கினார்கள் (சுமார் மதிப்பு 2 கோடி)
* 15 கார்கள் வாங்கியுள்ளார்கள். (அதுவும் கடனுக்குதான்)
* Helicopter வாங்குவதற்கு பேரம் நடந்துள்ளது
* ஏதோ ஒரு நலிந்த வங்கியையும் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளனர் (பார்கக செய்தி)
* இதில் புகைப்படத்தில் முன்றாவதாக உள்ள செல்வக்குமார் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் Junior.
* இரண்டு வருடங்களாக இவர்களுடைய வளர்ச்சியை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தொழிற்துறையினர் ஒருவித ஆச்சரியத்துடனே பார்த்தனர்.


இனி உடுமலைப்பேட்டையில் ஒவ்வொரு வீதியும் வெப் கேரமா மூலம் கண்காணிக்கப்படுமாம். நகராட்சி தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.

சில நாட்களாக நகரில் உள்ள அனைத்து கடைகளும் குறிப்பாக உணவகம் மற்றும் தேநீர் விடுதிகளை கண்டிப்பாக பத்து மணிக்கு முன்பாக மூடவேண்டும் என காவல் துறையினர் உத்திரவு போட்டுயுள்ளனர்.

12 comments:

நாகா said...

என்னது தாஜ் தியேட்டருக்கு வடக்கே சிக்னலா? காசு நெறய இருக்குதுன்னா இன்னொரு டாஸ்மாக் தொறந்தா குடிமக்களுக்காவது புண்ணியமாப் போவும்..

சிதம்பரம் said...

வருகைக்கு நன்றி நாகா...

அல்லது என்னை மாதிரி குடிக்காதமக்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் குடுத்தாங்கனா அரசாங்க பெர சொல்லி நல்லா ஊர் சுத்துவோம்...

SingaiAngel said...

Andha "palich" udumalaiyai kaana aavalaaga ullom.....suvaiyaana thagavalgalukku ungalai vittaal veru yaar.....andha moovarume namma oorkkaarargalaa? udumalai valarkirathu....hahaha...

சிதம்பரம் said...

@mala

தங்கள் வருகைக்கு நன்றி. அந்த மூவருமே நம்ம ஊர் தான். நீங்கள் சொல்லியபடி நம்ம ஊர் வளர்ந்துவிட்டது போல...

Vijay said...

anna eppadi na? 250 kodiya?athum namma oorula....

அபிமன்யு said...
This comment has been removed by the author.
அபிமன்யு said...

சிதம்பரம் ! மாதம் ஒரு தடவை ஊருக்கு வந்தாலும் நேரமில்லாததால சரியாய் சுத்தாம வந்துடுரேனு கவலைப்பட்டேன் ! உங்களால இப்போ அந்த கவலை தீர்ந்துது ! தெரிஞ்ச செய்தியும் தெரியாத செய்தியும் எதுவானாலும் உங்க எழுத்து நடையினால ஊருக்குள்ள இருக்கற மாதிரியே ஒரு சந்தோசம் ! தொடர்ந்து எழுதுங்க ! வாழ்த்துக்கள் !

சிதம்பரம் said...

@vijay

ஏமாற ஆளுங்க இருந்தா ஊர் ஒரு விசயமே இல்லை விஜய். எந்த ஊரு வேணாலும் ஏமாத்தலாம்....நீ வேணா லண்டன்ல இதே டெக்னி்க்கை யூஸ் பண்ணிப்பாரு :)

@ashok

மிக்க நன்றி அசோக் வருகைக்கும் வாழ்த்துக்கும்

Mahesh said...

இந்த ப்ளாக்கை இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டனே.... நானும் உடுமலைதான்.... அட்டகாசமா எழுதறீங்க... இனிமே ஃபாலோ பண்றேன்....

சிதம்பரம் said...

@ mahesh

வரவுக்கும் தங்கள் ஆர்டர்ருக்கும்(?) நன்றி :)

Appu said...

There is an Article about these guys in Vikatan (This week)

சிதம்பரம் said...

நன்றி அப்பு. அந்த கட்டுரையை பதிவெற்றி விட்டேன்