Thursday, August 6, 2009

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கடந்த சில வருடங்களாக வளர்ச்சிடைந்த நிறுவனங்களும் வீழ்ச்சியடைந்த நிறுவனங்களைப் பற்றிய பதிவு இது...

வளர்ச்சியடைந்தவைகள்

சுகுணா பவுல்டரி:

சிறிய நிலையில் உடுமலைப்பேட்டையில் ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று ஆயிரம் கோடியை தாண்டி மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது...இன்று சிக்கன் என்றாலே சுகுணா என்ற அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. ஆனால் நம்ம ஊர் மக்கள் வழக்கம் போல "அவுங்க எப்படி வளந்தாங்கனு எனக்கு தெரியாதா...அதெல்லாம் பூரா சசிகலா காசு" என்று புறம் பேசுகிறார்கள். அடப்பாவிகளா... நம்ம ஊர் மக்களை பார்த்தபின்பு தானே என்னவோ உடுமலை நாராயணகவி "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்" என்ற பாடல்வரிகளை எழுதியுள்ளார் போல.

ராகம் பேக்கரி:
அநேகமாக தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்களில் உள்ள எந்த பேக்கரியையும் விட modern equipments இவர்களிடம் உள்ளது. கொஞ்ச காலம் முன்பு ராயல் பேக்கரிக்கும் ராகம் பேக்கரிகும் இடையே கடுமையான போட்டி இருக்கும். ஆனால் இப்போது ராகம் பேக்கரியே தனி்க்காட்டு ராஜாவாக திகழ்கிறது. மூன்றாவது மாடியில் பெரிய ஜெனரேட்டர் ஒன்றை நிறுவியுள்னர். இரண்டாவது மாடியில் பெரிய Icecream பார்லர்க்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. (ஐஸ்கீரிம் சாப்பிடறதுக்கு தனியா இரண்டாவது மாடியில ஏன் பார்லர் வைக்கிறாங்க...நல்லா இருந்தா சரி..ஐஸ்கீரிம சொன்னேன்)

ஜோஸ் Jewellery
வந்தோரை வாழவைப்பது நம்ம ஊர். நம்ம வீதிகாரன், அடுத்த தெருக்காரன் சொந்தகாரன் இவங்க வைச்ச நகைக்டையெல்லாம் காத்து வாங்க..கேரளாவில் இருந்து வந்து தளிரோடு தாமு பில்டிங்கில் ஆரம்பிச்ச நகைக்கடையில் நம்ம ஊர் மக்கள் வாங்கி தள்ளுராங்க. அப்பறம் என்ன இன்னொரு கடை ஜோஸ் வெள்ளிமாளிகைனு தளிரோட்டிலே ஆரியபவன் எதுக்கால ஆரம்பிச்சுட்டாங்க. (நம்ம ஊரு பாலிஸி "எங்கிருந்தாலும் வாழ்க யாராயிருந்தாலும் வாழ்க்...)

லதாங்கி:
மீண்டும் வெளியூர்காரர்கள். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர்கள். தாஜ் தியேட்டர் கட்டிய இடத்தில் இரண்டு லதாங்கி தியேட்டர் கட்டலாம். அவ்வளவு குறுகிய இடத்தி்ல் கட்டப்பட்டது லதாங்கி. ஆனால் என்ன? இன்று உடுமலை நகரத்தில்உள்ள அனைத்து (கல்பனா அனுசம் தாஜ் லதாங்கி) தியேட்டர்களும் இவர்களின் நிர்வாகத்தில் உள்ளது.

வீழ்ந்தவர்கள்:
ஓகே என்று வாழ்ந்தவர்கள் இன்று வீழ்ந்த நிலையில் அவர்களைப் பற்றி பேசினால் நன்றாக இருக்காது. அதனால் அவர்களின் பெயர்களை மட்டும் எழுதுகிறேன்.

மணி விலாஸ் ஓட்டல் - தளி ரோடு
ஊரைச்சுற்றி உள்ள நிறைய நூல் மில்களும் , அதன் முதலாளிகளும், தொழிலாளிகளும்
விஜயதீப் துணிக்கடை - பழனி ரோடு
உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் :)

இது ஒரு முழுமையான பட்டியல் இல்லை. இந்த பட்டியலில் சேர்க்க தகுதியான பெயர்களை நீங்களும் கூறலாம்

10 comments:

அபிமன்யு said...

வளர்ச்சி அடைந்தவர்களில் முதலாக இருக்க வேண்டியது தனியார் பேருந்து நிர்வாகங்கள்தான்!

என்னை போன்று பெங்களூர் / சென்னை நகரங்களில் வேலை செய்து , அடிக்கடி ஊருக்கு வரும் அப்பாவிகள் வேறு வழியில்லாமல் வளர்த்து விடும் நிறுவனங்கள் இவைகள்தான் .

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை (அப்போதே இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தாலும் ) பயணிகளை மரியாதையாக நடத்திய இந்த ' பயண சேவை உந்துகள்' முன் போல அல்லாமல் அதிக பேர் வருவதனாலும் , அரசு பேருந்துகளின் தரமின்மையினாலும் கால தாமதத்தினாலும், ஆனைமலை எக்ஸ்பிரஸ், 'வரும் ஆனால் வராது' என்ற நிலையில் இருப்பதாலும் , 'என்ன செஞ்சாலும் இவனுக இங்கதான வந்தாகணும்' என்ற அலட்சியத்தால் சர்வாதிகாரம் செலுத்தி வருகின்றன.

சரி வேறு ரயிலில் போகலாம் என்றால் கோவைக்கோ திண்டுக்கலுக்கோ போய் அங்கிருந்து செல்லும் அலைச்சல் வேறு . கிடைக்கும் குறுகிய நாட்கள் விடுமுறையில் இந்த அலைச்சல் வேண்டாம் என்று திரும்பவும் இவர்களிடம் சரண் அடைகிறோம்.

இதற்கு தீர்வு என்ன என்பதிலேயே நிறைய பேருக்கு குழப்பம் இருக்கிறது ...
உண்மை என்னவென்றால் இந்த பூனைகளுக்கு மணி கட்ட எங்களுக்கு வழியும் தெரியவில்லை ...
ஆக வளர்ச்சி அடைந்தவர்களில் / இன்னும் மென்மேலும் வளருவதிலும் முதலாக இருக்க வேண்டியது தனியார் பேருந்து நிர்வாகங்கள்தான்!

சிதம்பரம் said...

வருகைக்கு நன்றி அசோக். உண்மை தான் அதுவும் குறிப்பாக KPN பண்ணும் கொடுமைக்கு அளவே இல்லை. மதியம் 12 மணிக்கு உடுமலை வருவதெல்லாம் சாதாரணம்.
என்ன பண்றது விவேக் ஒரு படத்துல சொன்னது மாதிரி பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர் என்ற நிலையில் நாம் இருக்கும் போது அதை இந்த மாதிரி ஆட்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

Mahesh said...

டிசோட்டா பேக்கரி கூட சேட்டுகதான். சீகிரமே வளர்ந்து சீக்கிரமே வீழ்ந்தது.
ஆனமலைஸ் ஹோட்டல் எப்பிடி இருக்கு?

Mahesh said...

+++ சுந்தரம் ட்ரேடிங், அசோக் ட்ரேடிங் கூட சேத்திக்கலாம்....

--- சிவராம் காபி ??

Appu said...

My opnion on Suguna is Hard work and focus on what they do has given such big success .I knew the Owners personally(I worked there for some time in S/w division -:)) ,their dedication and passion towards the buisness is amazing.I think this is what reason for the success rather than other things .


Some other changes i found during my last visit was
1.Gandhirams hotel

of course Chidhambaram you missed 250 crorepathy that you talked in previous post

KPN is has worst customer service not only from udumalpet where it may be from .
if you are stayed in balnaglore you realize this
you need run through to get the correct bus in madiwala as lot of buses was scehdueld that time .I friend once missed the bus thogh he came there 1/2 hour before .He taken cabin seat and catched the bus some where near salem.
(i think now place is changedd to bommanahalli but the running continues) and Once RTO catch near Erode and we stand still there for more than 3 hours
Horrible experince with these people.

சிதம்பரம் said...

ஆனைமலைஸ் பார் இருப்பதால் தள்ளாடமல் இருக்கிறது(??). மற்றபடி தங்கும் விடுதி மட்டம். சினிமாகாரர்கள் இந்த பக்கம் வருவதே இல்லை....சரிவர பராமரிப்பு இல்லை.

சிதம்பரம் said...

சுந்திரம், அசோக் ஆகியவை இன்றும் ஓரளவு நன்றாக தான் ஓடிக்கொண்டுயிருக்கிறது. ஆனால் இவர்களுக்கு போட்டியாக சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி குறைந்த தரம் குறைந்த விலை என்ற கொள்கையில் செல்வம் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பழைய பேருந்து நிலையம் அருகில் வந்துள்ளது. நல்ல வரவேற்ப்பும் கிடைக்கிறது...

ஜெயச்சந்திரன் said...

வளர்ந்தவர்களில்.... கல்பனா theatre அருகில் உள்ள பஜ்ஜி கடை..
ஒரு காலத்தில் சின்ன பஜ்ஜி கடையாக இருந்தது... இன்று 'hotel' ஆகி விட்டது....
கடின உழைப்பால் முன்னேறியவர்களில் அதுவும் ஒன்று.... இன்றும்... சிற்றுண்டிகள் தான் மிகவும் பணம் கொடுக்கிறது என்று நினைக்கிறேன்...

சிதம்பரம்.... 'udumalai.com' இன் பெயர் எல்லா ஊர்களிலும் ஒலிக்கிறது... நண்பன் ஒருவன் சமீப காலத்தில் உங்கள் வலை பக்கத்தை பற்றி கூறி நன்றாக உள்ளது என்றான்... நீங்க மென்மேலும் வளர எனது பரிபூரண வாழ்த்துக்கள்...

சிதம்பரம் said...

@ஜெயசந்திரன். appu
நன்றி தங்கள் வருகைக்கு...

ஜெயசந்திரன் நீங்கள் சொல்வது செந்தில் உணவகம். பஜ்ஜி கடையாக இருந்து இப்போது முழு நேர உணவாகமாக உயர்ந்ததுள்ளது...

நன்றி. உங்களைப் போன்ற தமிழர்களின் அன்பும் ஆதரவினலேயே இது சாத்தியமாயிற்று. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Unknown said...

Ramesh cafe has an extra ordinary growth, they've started another Gandhiraams hotel in old bus stand.. Note: Gandhiraams belongs to Ramesh Cafe..